
ஆருயிர் நடுங்கிடும் நொடியினை உணர்ந்தேன்
அவள் கண்களில் கண்ணீரின் அடையாளம் கண்டவுடன்...
காரிருள் கருவில் காயங்கள் இன்றி
எனை காத்தவள் கலங்கினால் கண்ணிருடன்.....
பூவினும் மென்மையை கொண்ட அவள் இதயம்
அது பூ போல் வாடியத்தை கண்டு துடித்தேன்.....
அவள் சிரித்திடும் பொழுது ஆனந்தம் சூழும்
அவள் அழுகையின் வரவை தடுக்க முயன்றேன் ....
அவள் கண்ணீரின் காரணம் நான் என்று உணர்ந்து
என்னையும் என் நிழலையும் ஏற்க மறுத்தேன் ...
அவள் அன்பெனும் வளையில் வளர்ந்து வந்து
இன்று அவள் தோற்பதை கண்டு தவித்தேன் ,துவழ்ந்து அழுதேன் ,மடிந்தேன் ....