அன்பெனும் பாதையில்
ஆயிரம் சலனங்கள்
வருவதும் போவதும்
இயற்கையின் நியதி !!!
மனம் சுடும் சொல்லினும்
கொடிய துன்பம்
உன் இதழ்களின் விளிம்பில்
மௌனத்தின் விடுதி !!!
வேதனை மிகுவதால்
வேகம் குறைவதும்
உழன்று தவிப்பத்தும்
உயிரின் உண்மை நிலை !!!
வாழ்வெனும் ராட்டினம்
சுழன்று முடிப்பதும்
மீண்டும் சூழல்வதும்
கடவுளின் மர்ம கலை !!!
கனவெனும் உலகில்
காயங்கள் இன்றி
வாழ்வதும் மகிழ்வதும்
மானுட மனம் அல்லவோ !!!
நிஜமெனும் நெருடலில்
அல்லலும் கிண்டலும்
அதன் வழி மாறி
போவதும் கனவல்லவோ !!!