Saturday, November 27, 2010

சிறகுகள் விரித்திட !!!




தாய் மடி காணா பூக்களும் உண்டு,
சேய் ஒன்றை காணா ஏக்கங்கள் உண்டு,
இரண்டும் சேர வழிகளும் உண்டு வா ....

விதைக்கும் விதையில் பொக்கிஷம் உண்டு,
எழுந்தால் உயர்ந்தால் மாற்றமும் உண்டு ,
மனதின் ஓரத்தில் ஈரமும் உண்டு வா .....

இனம் என்ன மதம் என்ன ,
ஓடும் குருதியில் பிரிவு என்ன,
மழலையின் அழுகையில்,
மயங்கா புதிர் என்ன ......

குலம் என்ன குணம் என்ன ,
குறைகள் இல்லா வாழ்வேன்ன ,.
சிறகுகள் அளித்திட ,
சங்கடம் தான் என்ன .....

புது உலகம் படைத்திடுவோம் !!!
அன்பின் பாதையில் நடந்திடுவோம் !!!
வருந்தாமல் வாழ்வளிப்போம் !!!
வீட்டில் நிலவை சிறையெடுப்போம் வா !!!...

Adopt a child. Lead your life with your head held high and a role model to others..

Your's friend ,
Rishma...

Sunday, November 14, 2010

இனிய நட்பு !!!



வானம் உனது ஆகுமே,
இந்நட்பில் பூமி புதிது ஆகுமே,

வையம் உனை காணுமே,
நீ உயர ஏணி நட்பாகுமே,.

நீ உயர்ந்தால் கைகள் தான் கோர்க்குமே,
கை கோர்த்து தடைக்களை தாக்குமே,

உன் கண்ணில் கண்ணீர் வந்தாலும்,
உனை கவலை தின்றாலும்,
நட்பு அதை வெல்லுமே... அன்பிலே ......

சிரித்து சிரித்து வயிறு நோகும்,
மனதின் துன்பங்கள் ஓடி போகும்,

வயது மாறும் வலியும் மாறும்,
எங்கள் நட்பிங்கு மலையை தாண்டும்,

காலை பனியும் கதிரின் ஒளியும்,
காணும் உலகம் மிக குறைவு,

நெஞ்சில் வலியும் நீண்ட பிரிவும்,
கண்டதில்லை எங்கள் உறவு,

பிரிவு இல்லா உறவு இல்லை
பிரிந்தும் நட்போடு
வாழ்வோம் அன்போடு
என்றும் என்றென்றுமே.........

உதட்டின் வார்த்தை கேலி செய்தாலும்,,
நட்பின் உள்ளம் அதை உயர்த்தி போற்றும்,

நீ சிரித்து பேசி துக்கம் மறைத்தாலும்,
நட்பின் விழிகள் அதை நொடியில் நோக்கும்,

உன் பரிவு ஒன்றே போதுமே,
எந்த பரிசும் இதற்கு இடாகுமா,

இந்த நட்பில் வாழும் பூக்கள் நாம்,
என்றும் வாசம் வீச மறுக்குமா,

உனது பெருமை உனக்கு தெரியாது,
உன்னை அடையாளம் காட்டும் கண்ணாடி,
இந்த இனிய நட்பாகுமே.....

I dedicate this poem to all of my dearset friends .. :) You mean a lot to me. Thank you so much.