Wednesday, July 7, 2010

பூமி பந்து


சுற்றும் விசை நான் அறியேன் ,
நீ சுற்றாமல் நின்றாலும் வியப்பில்லை

நீரின் சதவீதம் அதிகமானதால்,
நிலத்தின் தடயங்கள் காணவில்லை

மரங்கள் எல்லாம் காணாமல் போக,
காற்றை சுவாசிக்க முடியவில்லை

கடலில் நெகிழி தான் உயிரோடு வாழ்கின்றது,
மீன்கள் எதுவுமே மிதப்பதில்லை

வாழ்ந்த வாழ்கையின் கதை சொல்ல ,
காகிதம் என்ற பொருள் மிச்சமில்லை

நாளை தேவை என்று உணர்ந்திருத்தும்,
நாம் யாரும் சேமிக்க பழகவில்லை

பச்சை நீலம் என்று நான் வரைந்தேன்
என் பிள்ளைகளோ வரைந்தது

நீல பூமி பந்து....!!!!!!!!!

2 comments: