விழி இரண்டில் கண்ணீர சூழ,
மனம் உடைந்து இரண்டாய் போக,
சந்தித்தேன் உன் பிரிவை.....
உன்னில் பிழை இல்லை,
நானும் அங்ஙனமே...
என் உறவு பொய் இல்லை,
நீயும் அங்ஙனமே....
காலத்தின் கட்டாயமோ,
இந்த காதலின் பிரிவு...
உன் காயம் பெரியதா,
என் வலிகள் பெரியதா என்ற
விவாதம் ஓயாமல் தொடருமோ!!! என அச்சுறுத்தும் இந்த பிரிவு...
வாழும் நாட்கள் இங்கு சுமையாய் ஆனதென்,
உயிர்முச்சு வாங்க , அது பிழையாய் போனதேன்..
என் நினைவு அச்சகத்தில் , உன் பெயரின் பதிப்பு எண்ணில் அடங்கா....
உற்சாகம் தரும் உன் நினைவிற்கு எதிராய் , சோர்வை தரும் உன் பிரிவு.....
இரவின் பின் விடியல் நிச்சயம்,
பிரிவின் பின்................................................................... ?
Super de rishma
ReplyDelete@blogger , Thanks.. By the way,your name ?
ReplyDelete