Thursday, February 14, 2013

என் காதலே....





உனை பார்க்கும் முதல் நொடியில்
உயிர்த்தெழும் என் உள்ளம்

நீ பேசும் வார்த்தைகளால்
நிறையும் என் மௌனம்....

கை கோர்த்து நடக்கையில்
ஒட்டி பிறந்தததை போல் ஆனந்தம்...

உன் விரல் என் கன்னத்தை சீண்டுகையில்,
பறிப்போகும் என் நாணம்...

தோள் மீது சாய வைத்து ,
விழி பார்த்து பேசுகையில்...
உணர்த்தேன் உன் காதலின் ஆழம்...

எதற்கும் கலங்கா மனம் கொண்ட மன்னனாய் நீ இருந்தும்...
என் கண்ணில் ஓர் துளி வழியும் கண்ணீரில்,
கல்லும் கரைவது போல்
உடையும் உன் உயிர்...

உனை பற்றி கூற...
உன் காதலை போற்ற...
எனக்கில்லை வார்த்தை...
உன் உயிர் கொண்ட காதல்
உளராமல் போக,
என் உயிர் இருக்கும் நொடி வரை
உனை உயிராக காதலிப்பேன்.....

1 comment: