Sunday, October 3, 2010

என் சிந்தனையின் ஓர் பகுதி


மனதில் பெரும் பாரமும் , கண்களில் கண்ணீரும் சூழ கால சக்கரம் சுழன்று கொண்டிருந்தது ஒரு காலை வேலை , இரு முதியவர்கள் ஓர் விட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். பள்ளி விடிதிக்கு செல்ல மறுக்கும் சிறு பிள்ளைகள் போல் முகம் வாடிப் போய் இருந்தனர். உள்ளே இருந்து சாப்ட்வேர் என்ஜினியர் போல் தோற்றம் அளித்த ஒருவர் மிகவும் சந்தோஷத்துடன் வெளியேறினார். அந்த முதியவர்களை சிறிதும் இரக்கமின்றி ஓரிரு வார்த்தைகள் கூட பேசாமல் தன் நான்கு சக்கர வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தான்.

அவ்விட்டில் இருக்கும் சிலர் , அவர்களை மிகவும் பாசத்துடன் உள்ளே அழைத்து சென்றனர்.....

முதியோர் இல்லம்........இனி அதுவே அவர்களின் உலகம் என்று முடிவு செய்தது, அவர்கள் இல்லை , பத்து மாதம் வலியில்லை சுகமென சுமந்த தாயையும், தன் உழைப்பால் சேகரித்த எல்லாவற்றையும் தனக்கென்று எதுவும் ஏற்காமல் தன் பிள்ளைக்கே அனைத்தும் சொந்தம் என்று கருதிய தந்தையையும் , வரம் என்று கருதாமல் பாரம் என்று எண்ணிய தலைச்சென் பிள்ளை.

தனக்கென்று ஒரு வேலையும் , வாழ்கைக்கு உறுதுணையாக மனைவியும் , கை நிறைய சம்பளமும் கிடைத்து விட்டால், தாய் என்ன தந்தை என்ன , அனைவரும் அவர்கள் கண்களுக்கு , தான் சம்பாதிக்கும் பணத்தை வீண் செலவுகளுக்கு உள்ளாக்குபவர்கள்.

காலம் ஒரு வட்டம் , அது மீண்டும் சுழலும் , அவர்களும் இந்நிலைக்கு தள்ளப் படுவார்கள்.. அன்று உணரும் அந்த வலியை இன்றே உணர்ந்து நம் பெற்றோர்களை அக்கொடிய துன்பத்திலிருந்து மீட்கலாம் அல்லவா !!!!!

இளைஞனே !!!!!!!!!!! என்ன சாதித்தாய் நீ , உன் பெற்றோரை முதியோர் இல்லதில் அடைத்து ... உன்னை அவர்கள் பாரம் என்று கருதி இருந்தால் , இன்று நீ உயிருடன் வாழ்வது கூட சாத்தியம் இல்லை.. எந்த காலம் ஆனாலும் , நீ இன்றும் மானிடன் தான் , உணர்ச்சிகள் அற்ற மிருகம் இல்லை... கடவுளை நீ வீட்டை விட்டு அனுப்பி விட்டு , கோயிலில் நீ குப்பை குப்பையாய் பணத்தை கொட்டினாலும் நீ செல்வந்தன் ஆக இயலாது , ஏனெனில் உன் விலைமதிப்பற்ற செல்வங்களை நீ துளைத்து விட்டாய்...

மற்றொறு வேண்டுகோள் : இது நல்ல குணம் கொண்டவர்களுக்கு மட்டும் ...

உங்களக்கு தெரிந்த முதியோர் இல்லங்கள் இருந்தால் , நீங்கள் அங்கு சென்று பணம் உதவி எதுவும் செய்ய தேவையில்லை, ஒரு மாதத்தில் ஒரே ஒரு நாள் சென்று , அங்கிருக்கும் பெரியவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு மகனாகவோ அல்ல மகளாகவோ வாழ்ந்து பாருங்கள் .... அன்று உணர்வீர்கள் சொர்க்கம் எப்படி இருக்கும் என்று........


ஓ !!!!!! என் கதையின் தலைப்பை கூற வில்லையோ ? தெரிந்து கொள்ளுங்கள் , மனம் மாறுங்கள் !!!!!


பெற்றோர்களின் அவலநிலை !!!!! …………………….




நம்பிக்கையுடன் தோழி ,

ச. ரிஷ்மா :)

8 comments:

  1. Hey nice one rishma.. tears were rolling down while reading this post. :(

    I should say its every individuals responsibility to take care of his/her parents.

    Thought kindling one though... thanks for the post.. keep updating with more and more.. :)

    ReplyDelete
  2. hey really nice post rish....hope v shld never do like this for our parents.....

    ReplyDelete
  3. கடவுளை நீ வீட்டை விட்டு அனுப்பி விட்டு , கோயிலில் நீ குப்பை குப்பையாய் பணத்தை கொட்டினாலும் நீ செல்வந்தன் ஆக இயலாது , ஏனெனில் உன் விலைமதிப்பற்ற செல்வங்களை நீ துளைத்து விட்டாய்...line super d

    ReplyDelete
  4. Nice dear :). manadhai sudum varigal ovondrum.

    ReplyDelete
  5. Nice one.. Superb..
    உன்னுடைய கவிதையிலும், கதையிலும் சமூக அக்கறை தெரியுது.
    Keep it up..

    ReplyDelete