(முன் குறிப்பு : இந்த கதையை கொஞ்சம் நகைச்சுவையுடன் படித்தால் போர்( bore ) அடிக்காது)
ஓர் இடத்தில் அளவுக்கு மீறிய கூட்டம் , எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ?
ரேஷன் கடை ? இல்லை , மருத்துவ மனை ? இல்லை , கோயில் ? அட இல்லைங்க .....
பின்ன எந்த இடம் ங்க அது ? இத நீங்க முதலையே கேட்டு இருக்கலாம்.. சரி கேளுங்க!!!!
தினமும் காலையிலே அவசர அவசரமா தயாராகி, அறைகுறையா சாப்பிட்டு, அம்மா, அப்பா கிட்ட வழக்கம் போல திட்டு வாங்கிக்கிட்டு, "பேருந்தில் இன்னைக்கு எனக்கு ஜன்னல் ஓரம்" அப்படினு பகல் கனா கண்டு கிட்டே போவேன், அந்த அளவுக்கு மீறிய கூட்டம் கூடி இருக்கும் பேருந்து நிலையத்திற்கு .... (புரியுது, இதுக்கு இவ்ளோ பில்ட் அப் தேவையான்னு நினைக்கிறீங்க, கூல் கூல், ஏன்னா சொல்ல போற விஷயம் ரொம்ப ஹாட்)
அத்தனை கூட்டத்திலேயும், வேலைக்கு போறவங்க, காலேஜ், ஸ்கூல்க்கு போகும் பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு பெரும் பட்டாளமே மூச்சு விடக் கூட இடம் இல்லாம இருக்கும் அந்த சொகுசு பேருந்தில் ஏறி நிக்கிறது நம்ம ஊறு வழக்கம் ..
இதுல என்ன வேடிக்கைன்னு பார்த்திங்கினா, நம்ம மஹா புருஷர்களுக்கு மிகுந்த கொண்டாடமே, இந்த கூட்டமானா பேருந்து தான்.. அதுக்கு பல காரணங்கள் உண்டு ....
மகளிர் ன்னு போஸ்டர் ஒட்டி இருந்தாலும், அந்த எட்டு ஸீட்லயும் குறைந்தது நாலு ஸீட்ல, ஆண்கள் தான் அக்கிராமிச்சிருப்பாங்க !!!!!! இது போதாதுனு, பெண்கள் ஒரு வரிசையாய் நின்றிருக்க , கொஞ்சமும் இடைவெளி இல்லாமா, பேருந்தை சாக்கா வைத்து கொண்டு இடிப்பாங்க!!! சில சமயம் அருவருப்பா இருக்கும் , இந்த பேருந்து பயணம் ............
என்னடா ஆண்களை பத்தி இப்படி சொல்றேனு நினைக்கிறீங்களா ? இந்த கதையை படிக்கும் ஆண் மக்களுக்கு கோபம் வருகிறதா ? என்ன செய்றது பாஸ், சில சமயம் உண்மையை சொன்னா கோபம் கட்டாயம் வரும் . இருந்தாலும் நான் சொல்றது பத்துல, ஒன்பது பேர் இப்படி தான் அலையறாங்க... நீங்க அந்த ஒன்பது பேர்ல இல்லைனா, உங்களுக்கு கோபம் வர தேவையில்லை பாஸ் ....
சரி இன்னொரு முக்கியமான விஷயம், பெண்களுக்கு பெண்கள் தான் எதிரினு சொல்வாங்க.. அதை இந்த பேருந்து பயணங்களில் நீங்க பார்க்கலாம் ... ஆண்கள் தான் "எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரி" அசையாம பெண்களக்கு அருகாமையில் நிப்பாங்க .... பெண்களும் அப்படி தான், கொஞ்சம் நகர்ந்து நின்னா ஆயிரம் ரூபாய் அபராதம் போல , இடம் இருந்தும் நகர மறுப்பாங்க ....
ஒரு வயதான பாட்டி, நிக்க முடியாம நிப்பாங்க ... அதை கண்டும் காணாத மாதிரி ஆண்களும் சரி, பெண்களும் சரி அப்படியே உட்கார்ந்து இருப்பாங்க ....... இது போல் நிறைய நாள் நடந்திருக்கும், நீங்க கூட உட்கார்ந்து இருந்திருபீங்க, ஸாரீ பார்த்திருபீங்க ... அந்த மாதிரி, அன்னிக்கு ஒரு பாட்டி வயது முதிர்ச்சியின் காரணமாக, நிற்க முடியாமல் தவிக்க, வாய்யை திறந்து உட்கார இடம் கேட்ட பின்னரும், சிலர் தூங்குவதை போல, சிலர் தான் எழுந்திருக்காமல், பிறரை எழுந்திருக்க கூச்சல் போட்டு கொண்டிருந்தாங்க .... அப்போ பள்ளிக்கு போகும் இரண்டு சிறு பிள்ளைகள் தாங்கள் சேர்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பயணி ஸீட்டில் , அந்த பாட்டியை அமர்த்தினார்கள் !!!
அந்த கள்ளம் கபடம் இல்லாத பிள்ளைகளிடம் காண படும், அந்த உன்னதமான பரிவு, விட்டு கொடுத்தல், இது போல நல்ல குணங்கள், இந்த கலி யுகத்தில் எங்கேயும் தென்படறது இல்ல.. ஆனால் அன்று, நிறைய பேருடைய தலை வெட்கத்தில் தொங்கி இருந்தது ........
அதனால் என்னுடைய அன்றைய பயணம் ,அவ்வளவு நெருக்கடியுலும் இனிய பயணமாக முடிந்தது .............. பொறுமைக்கு நன்றி !!!
இப்படிக்கு தோழி ,
ச. ரிஷ்மா
:)Nice dear. Pechu tamil alaga puriudhu.
ReplyDeleteRomba romba nalla irukku...and very trueeeeeeeeeee
ReplyDeleteதினமும் நீ படர கஷ்டம் புரியுது. :)
ReplyDeleteBut நல்லா எழுதி இருக்கே...
very gud real life scenario
ReplyDelete