Tuesday, June 29, 2010

நிலா

கைக்கு எட்டா நிலவே,
உன் கண்ணீர் தான் மழையாய் பெய்கின்றதோ!!!!

உன் முகத்தில் உள்ள வெண்மை,
பெண்ணின் மனத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியோ!!!

இரவு வானத்தின் கருமையில்,
உன் வட்ட முகம் வண்ண பொட்டு ஆனதோ!!!!

கன்னியர் உனை காணும் நேரத்தில்,
அவள் கணவனின் முகத்தை காட்டுவாயோ!!!!

பிள்ளைகள் சோறு உண்ணாவிடில்,
அதற்கு அம்புலி மாமாவும் நீதானோ!!!!

நீ தனி காட்டு ராணி போல் நின்றுருக்க,
நட்சத்திரங்கள் உனக்கு அழகூட்டும் தோழிகளோ!!!!

சிவனின் தலையில் பிறை சூடி,
உன் பெருமை அறிய செய்வாயோ!!!!

உன்னிடம் பேசி பழகுவதால்,
உன் பால் குணம் எனக்கும் தந்தாயோ!!!!

நான் யாரையும் இழக்கவில்லையடி,
உன் முகத்தில் அவர்களை பார்ப்பதனால்!!!!

Wednesday, June 23, 2010

ஈரம்

குழந்தையின் மழலையில் ,

மழையின் சாரலில் ,

சங்கீதத்தின் இன்னிசையில் ,

இயற்கையின் அழகில் ,

நெஞ்சுக்குள் ஏதோ

ஆனந்த ஈரம்............................

பசியின் கூச்சலில்

குடிசையின் நெருக்கத்தில்

நீரின் தாகத்தில்

அன்பின் வெறுப்பில்

விழிகளின் ஓரம்

கசிந்தது ஈரம்............................

Thursday, June 17, 2010

ஹைக்கூ - நம் உலகம்

நேற்று ,
இல்லை என்று வந்தோர்க்கு இனிய விருந்து ....

இன்று ,
இல்லாதவரிடம் ஒன்றும் இல்லை ,
இருப்பவரிடம் ஒன்று இல்லை , மனிதாபிமானம் .....

நாளை ,
இருப்பவனின் மனதில் இருட்டு ,
இல்லாதவன் மனதில் திருட்டு .....

தாய்க்காக மகள்


தாய் என்று அழைப்பதற்கு தவம் இருந்தேன் நான் ,
தாயே உன் காலடியில் சரண் அடைத்தேன்

சிறகுகள் தந்தவள் நீ அல்லவா ,
எனக்கு சிந்தனை கொடுத்தவள் நீ அல்லவா ,

நீ மகளுக்கு தாய்க்கு மேல் தோழி அல்லவோ ,
அவள் இதயத்தில் வாழ்ந்திடும் சேய் அல்லவோ.....

அம்மாவின் கோபம் கண்டு பயம் அறிந்தேன் ,
உன் பார்வையின் அன்பினிலே அதை மறந்தேன் .....

வார்த்தைகள் இல்லையடி உனை கூற ,
உன் வாழ்க்கையின் அர்த்தங்கள் எனை சேர ,

பெற்றவள் பெயர் சொல்லி நான் வளர்ந்தேன் ,
தினம் என் பெயர் அவள் சொல்லி மனம் மகிழ்ந்தாள் ....

எனை கற்றவள் என ஊரில் பேச வைத்தாள் ,
பிறர் கண் த்ரிஷ்டி சேராமல் எனை காத்தாள்..........

காலணி இல்லாமல் தினம் நடந்தாள் ,
அந்த தெய்வத்தை காண இந்த தெய்வம் சென்றாள்....

சிங்காரம் செய்யவில்லை அவள் தனக்கு,
எல்லா அலங்காரமும் செய்வாள் தாய் எனக்கு ..

நான் அடுப்படியில் கால் கை வைத்ததில்லை,
அவள் செல்லமாய் எனை அடித்தால் வலிக்கவில்லை....

வேறிடம் சென்றாலும் நீ என் தாயடி ,
நான் உனை விட்டு நீங்காத உன் மலர் பூவடி......


MS SQL Server Basics documentation.



Here is the link for learning the basics of SQL Server database. Make use of it.

It's a well prepared document with lot of examples and reference links are provided.

http://www.scribd.com/doc/33165557/SQL-Server-Basics

Monday, June 14, 2010

வறுமையின் வலி

மானுட பிறவியின் நெடுந்தூர பயணத்தில் , சிறு புல்லின் மேல் இருக்கும் ஈரம் கூடவா உன் மனதில் இல்லை...


கை கட்டி வாய் பொத்தி நாள் முழுதும் நின்றிருந்தாலும் , குடிக்கும் நீர் கூட கானல் நீராய் போய் விடும் சோகம்...



கண் மூடி தூங்க ஒற்றை வீடு,
பசி போக்க ஒரு வேலை சோறு,
வெயில் அடிக்கையில் நிழலின் சுகம் ,
மழை பெய்கையில் ஒதுங்க இடம்,
மனிதநேயம் கொண்ட மனம்,
இவை யாவும் கண்டதில்லை எங்கள் இனம்.........

பூமி உன்னை தாங்குவதை பாரம் என்று நினைத்தால் ,
மரங்கள் இல்லா நிலம் என்று மழை பெய்ய மறுத்தால்,
இலையில்லா மரங்கள் சுத்தமான காற்றை தர இயலாவிட்டால்,
நீ சேர்த்து வைத்த உயிரில்லா காகிதம் உன்னை காப்பாற்ற இயலாது...

மனிதநேயத்தின் பிறந்த நாளையும்,
வறுமையின் இறந்த நாளையும்,
எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் வறுமையின் வலி........................


Sunday, June 13, 2010

Intro to my blog.


Hi friends ,

I have created my blog with so much thoughts inside me.
I would like to share so many things with all of my friends and share the igniting thoughts which we have inside us.

Before we start anything , we need his blessings right !
Ya I am talking about my cute ganesha only !!!!

Well , I hope my scribbles will be useful as well as entertaining for all who visit my blog. Thank you.