தாய் என்று அழைப்பதற்கு தவம் இருந்தேன் நான் ,
தாயே உன் காலடியில் சரண் அடைத்தேன்
சிறகுகள் தந்தவள் நீ அல்லவா ,
எனக்கு சிந்தனை கொடுத்தவள் நீ அல்லவா ,
நீ மகளுக்கு தாய்க்கு மேல் தோழி அல்லவோ ,
அவள் இதயத்தில் வாழ்ந்திடும் சேய் அல்லவோ.....
அம்மாவின் கோபம் கண்டு பயம் அறிந்தேன் ,
உன் பார்வையின் அன்பினிலே அதை மறந்தேன் .....
வார்த்தைகள் இல்லையடி உனை கூற ,
உன் வாழ்க்கையின் அர்த்தங்கள் எனை சேர ,
பெற்றவள் பெயர் சொல்லி நான் வளர்ந்தேன் ,
தினம் என் பெயர் அவள் சொல்லி மனம் மகிழ்ந்தாள் ....
எனை கற்றவள் என ஊரில் பேச வைத்தாள் ,
பிறர் கண் த்ரிஷ்டி சேராமல் எனை காத்தாள்..........
காலணி இல்லாமல் தினம் நடந்தாள் ,
அந்த தெய்வத்தை காண இந்த தெய்வம் சென்றாள்....
சிங்காரம் செய்யவில்லை அவள் தனக்கு,
எல்லா அலங்காரமும் செய்வாள் தாய் எனக்கு ..
நான் அடுப்படியில் கால் கை வைத்ததில்லை,
அவள் செல்லமாய் எனை அடித்தால் வலிக்கவில்லை....
வேறிடம் சென்றாலும் நீ என் தாயடி ,
நான் உனை விட்டு நீங்காத உன் மலர் பூவடி......
en manamaarndha vaazthukal . . . " than maganai saandrone ena keta thaai " , unnai kandu un petror perumai kolvar , mikka magizchi :)
ReplyDeleteGreatma, chance illa, thirumba thirumba vasichikite iruken. :)
ReplyDeleteThis should be dedicated to your mom right?
ReplyDeleteIntha kavithai, unga amma mele nee yevvvvvvvvvvvvvlo anbu vachirukenu kamikkuthu ;)
Try more.. Keep it up
its so good that i cannot comment anything... very good......
ReplyDelete