மானுட பிறவியின் நெடுந்தூர பயணத்தில் , சிறு புல்லின் மேல் இருக்கும் ஈரம் கூடவா உன் மனதில் இல்லை...
கை கட்டி வாய் பொத்தி நாள் முழுதும் நின்றிருந்தாலும் , குடிக்கும் நீர் கூட கானல் நீராய் போய் விடும் சோகம்...
கண் மூடி தூங்க ஒற்றை வீடு,
பசி போக்க ஒரு வேலை சோறு,
வெயில் அடிக்கையில் நிழலின் சுகம் ,
மழை பெய்கையில் ஒதுங்க இடம்,
மனிதநேயம் கொண்ட மனம்,
இவை யாவும் கண்டதில்லை எங்கள் இனம்.........
பூமி உன்னை தாங்குவதை பாரம் என்று நினைத்தால் ,
மரங்கள் இல்லா நிலம் என்று மழை பெய்ய மறுத்தால்,
இலையில்லா மரங்கள் சுத்தமான காற்றை தர இயலாவிட்டால்,
நீ சேர்த்து வைத்த உயிரில்லா காகிதம் உன்னை காப்பாற்ற இயலாது...
மனிதநேயத்தின் பிறந்த நாளையும்,
வறுமையின் இறந்த நாளையும்,
எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் வறுமையின் வலி........................
Great De Go ahead. Picture is vert perfect for this poem.
ReplyDeleteazhagana varigal.....thodarattum un kavithai payanam......
ReplyDelete